Thursday, May 23, 2024

அல்லு அர்ஜூன் இவ்வளவு எளிமையா? ட்ரெண்ட் ஆகும் புகைப்படம்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜூன், தனது புதிய படமான புஷ்பா 2 மூலம் திரைக்கு வரவுள்ளார். சமீபத்தில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்படியான சூழலில், அல்லு அர்ஜூன் தனது மனைவியுடன் சாலையோர தாபாவில் சாப்பிடும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அந்த புகைப்படம், “அல்லு அர்ஜூன் மற்றும் ஸ்னேகா காரு எளிமையான சாலையோர தாபாவில் சாப்பிடுகிறார்கள். எளிமையான மனிதர்,” என்ற தலைப்புடன் பகிரப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் வெளியான புஷ்பா படம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்த இரண்டாம் பாகத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியிடப்படவுள்ளது.

- Advertisement -

Read more

Local News