அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. ‘புரொடக்ஷன் நம்பர் 4’ என தற்காலிகமாக இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.


முழு நீள பொழுதுபோக்கு படமாக உருவாகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரிக்கிறார். இந்நிலையில், படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது.

