Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

அமீரிடம் இருந்து மைக்கை பிடுங்கிய கரு பழனியப்பன்! கடுப்பான அமீர்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அமீர் தற்போது ஆதம்பாவா இயக்கத்தில் மூன் பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பில் ‘உயிர் தமிழுக்கு’ படத்தில் நாயகனாக நடித்திருகிறார். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பில் பத்திரிகையாளர்கள் அமீரிடம் சரமாரியாக பல கேள்விகளைக் கேட்டனர்.

அப்போது செய்தியாளர் ஒருவர், உங்களின் நண்பர் ஜாபர் சாதிக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்றம் தான் பதில் சொல்லவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தும் இல்லை. அவர் என்ன தொழில் செய்தார் என்பது உங்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், அவருக்கு இவ்வளவு பணம் எங்கு இருந்து வந்தது. அதன் பின்னணி என்ன என்று உங்களுக்கு சந்தேகம் வரவே இல்லையா என்று கேட்டார்.

இதற்கு பதில் அளித்த அமீர், இந்த கேள்வியை நீங்கள் லைகாவின் உரிமையாளரிடம் கேட்டீர்களா? ஒரு கார்ப்பரேட் நிறுவனம் வந்தால் கேட்கமாட்டீர்கள், ஆனால் என்னை போன்று தனி நபரிடம் இந்த கேள்வியை கேட்பதில் என்ன நியாயம். அவர் மீதும் இதுபோன்று குற்றச்சாட்டு இருக்கு ரஜினி, விஜய் கேட்டார்களா?, அப்போ என்னை மட்டும் ஏன் கேட்குறீர்கள் என்று அமீர் பதில் அளித்துக்கொண்டு இருந்த சமயத்தில், அமீரின் அருகில் இருந்த கரு பழனியப்பன், அமீரிடம் இருந்து மைக்கை பிடுங்கி பேச ஆரம்பித்தார்.

தம்பி, எல்லாம் யானை எப்படி இருக்கும் என்பதை சொல்ல நினைக்கிறோம்.நீங்கள் தடவிப் பார்ப்பது தும்பிக்கையை, நான் தடவிப் பார்ப்பது காலு, அவர் தடவிப்பார்ப்பது வயிறு, அனைவரின் கண்ணும் கட்டப்பட்டு இருக்கு யாருக்கு என்ன என்று தெரியாது என்றார்.

மீடியாக்கள் எதையும் விரைந்து முடிவு செய்து தீர்ப்பு எழுத கூடாது என்றார் அமீர்.அதேபோல், நீங்கள் எந்த விசாரணையையும் நடத்தாதீர்கள். இது “உயிர் தமிழுக்கு ” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு. இந்தக் கேள்விகளையெல்லாம் நீங்கள் கேட்பீர்கள் என்பது அவருக்குத் தெரியும், அதற்கெல்லாம் அவர் ஏற்கனவே பதிலளித்துவிட்டார், அமீர் இதுகுறித்து தனியாக ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்துவார். இந்த பேச்சு முடிவுக்கு வராத பேச்சு என்று கரு.பழனியப்பன் கூறினார்.

- Advertisement -

Read more

Local News