Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

அமரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது‌… வெளியான அமரன் பட அப்டேட் ! #AMARAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் அயலான் படத்தின் வெற்றியை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ‘அமரன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். மறைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்தன் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளனர். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்று தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வருகின்ற அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் படத்தின் முதல் பாடலை ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிடுவதற்கான பணி நடந்து வருகிறது.

மேலும் சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் SK23 படத்திலும் மேலும் அவரது நண்பரும் இயக்குனருமான சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அதுமட்டுமின்றி சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த புறநானூறு படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News