ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் ‘அமரன்’ படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை எட்டியதால், தற்போது ‘எஸ்.கே.23’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த பொங்கலுக்கு வெளியான ‘அயலான்’ படத்தின் பின், சிவகார்த்திகேயன் ‘அமரன்’ படத்தில் நடித்தார். இந்த படத்தை கமலின் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இது ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் ஆகும்.
மேஜர் கதாபாத்திரத்துக்காக உடல் எடையைக் கூட்டி, கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். ‘அமரன்’ படத்திற்கு பின், ‘எஸ்.கே.23’ படத்திற்காகவும் அதேபோல உடலை வைத்துள்ளார். ‘அமரன்’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது, ‘எஸ்.கே.23’ படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது.
‘அமரன்’ படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த பின், ‘எஸ்.கே.23’ படத்தின் தலைப்பும் வெளியிடப்படும் என்று கூறுகிறார்கள். இந்த படத்தில் ருக்மிணி வசந்த், பிஜூ மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
மலையாளத்தில் அதிரடி ஆக்ஷன் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சுதீப் இளமன், இப் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார். சென்னை, பாண்டிச்சேரி படப்பிடிப்பின் பின், தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடக்கிறது. சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.