Saturday, December 28, 2024

‘அனிமல்’ படம் ராஷ்மிகா மீதான என் பார்வையை மாற்றியது… நடிகை சஞ்சீதா ஷேக் OPEN TALK

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராஷ்மிகா மந்தனா தற்போது நாட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார். அனிமல் மற்றும் புஷ்பா 2 படங்களின் வெற்றியால், அவரது புகழ் மிகுந்த உயரத்தை அடைந்துள்ளது என்று கூறலாம். இதனால், அவர் இந்திய சினிமாவின் மிகவும் விரும்பப்படும் கதாநாயகிகளில் ஒருவராக மாறியுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில், பிரபல பாலிவுட் நடிகை சஞ்சீதா ஷேக், ராஷ்மிகா மந்தனா குறித்து தனது எண்ணத்தை பகிர்ந்து, ‘அனிமல்’ படம் அவருடைய பார்வையை மாற்றியதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,நான் சமீபத்தில் பார்த்த படம் புஷ்பா 2. அந்த படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நல்ல நடிப்பைக் காண்பது எப்போதும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. புஷ்பா 2 ஒரு அல்லு அர்ஜுன் படம் தான், ஆனால் ராஷ்மிகா தனக்கென தனி இடத்தை உருவாக்கி தனது முத்திரையை பதித்திருந்தார். அது மிகவும் பாராட்டத்தக்கது.

நான் ராஷ்மிகாவை பெரும்பாலும் சமூக ஊடகங்கள் வாயிலாகவே பார்த்தேன். அப்போது, அவரைப்பற்றி எனக்கு இருந்த எண்ணம், அவர் நடித்த ‘அனிமல்’ படத்திற்குப் பிறகு மாறியது. அந்த படத்தில் அவர் மிகவும் அழகாகவும் திறமையாகவும் இருந்தார். ரன்பீருடன் அவர் நடித்த ஒரு காட்சி அவரைப் பற்றிய எனது பார்வையை முற்றிலும் மாற்றியது; அவர் சிறந்த நடிகை என்ற நிலைக்கு உயர்ந்தார். புஷ்பா 2-ல் அவர் மீதான மரியாதை எனக்குள் மேலும் அதிகரித்தது,” என்றார்.நடிகை சஞ்சீதா ஷேக் கடைசியாக, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான ‘ஹீரமண்டி’ வெப் தொடரில் வஹீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

Read more

Local News