நாட்டாமை படம் இன்றைக்கும் பேசப்படுகிறது என்றால் அந்த படத்தில் வரும் மிக்சர் மாமா நகைச்சுவை காட்சி தான் அந்த காட்சியை எப்படி எடுத்தேன் என்று கே எஸ் ரவிக்குமார் பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.இந்த காட்சி பண்ணும் போது, எனக்கு எலக்ட்ரீஷியன் ஞாபகத்திற்கு வந்தது, அவர் எப்போதும் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பார். உடனே அவரை கூட்டிட்டு வர சொல்லி, நடிக்க சொன்னேன், அவர் பயந்து போய் சார் எனக்கு நடிக்க வராது என்றார். நீ நடிக்கவே வேண்டாம், ஆக்ஷன் சொன்னதும், மிக்சர் சாப்பிட்டுக்கிட்டே இரு, அது போதும் என்றேன். அந்த காட்சி மிகப்பெரிய அளவில் ஹிட்டாகி, அவர் எங்கேயோ போய்விட்டார். பின் தாம்பூல தட்டுடன் வீட்டுக்கு வந்து, ரொம்ப நன்றி சார் என்னை நடிகனாக்கிட்டீங்க என்றார் என கே எஸ் ரவிக்குமார் அந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
