Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

அது ரியல் இல்லையாம் ரீலாம்… நிவேதா பெத்துராஜ் இப்படி பண்ணிட்டாங்களே!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை நிவேதா பெத்துராஜ், மதுரையில் பிறந்து, துபாயில் செட்டில் ஆனவர். அவர் மாடலிங் மற்றும் கார் ரேசிங் ஆர்வம் கொண்டவர். 2016 ஆம் ஆண்டு, “ஒரு நாள் கூத்து” திரைப்படத்தில் ஹீரோயினாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலிருந்தே அவர் மிகுந்த கவனம் பெற்றார், குறிப்பாக “அடியே அழகே” பாடல் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் “எம்மனசு தங்கம்,” “திமிரு புடிச்சவன்,” “டிக் டிக்” போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார். தற்போது, தமிழ் திரைப்படமான “சொப்பன சுந்தரி”யின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார்.

நேற்று முன் தினம் நிவேதா பெத்துராஜ் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது போன்ற வீடியோ ஒன்று பரவியது. போலீசார் அவரது காரை சோதனை செய்ய வேண்டும் எனக் கேட்டனர், ஆனால் நிவேதா அதை மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வீடியோ வைரலானது.போலீசார் காலில் செருப்பு அணிந்து இருப்பதால், இது ஏதேனும் படத்தின் ப்ரோமோஷனுக்காக எடுத்திருக்கலாம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர்.

தற்போது, உண்மையில் அது “பருவு” என்ற வெப் சீரிஸ் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ என தெரியவந்துள்ளது. அந்த தொடரின் கதை, நிவேதா பெத்துராஜ் ஒரு பிணத்தை காரில் வைத்து சுற்றுவது பற்றியது. இது தெரிந்ததும், ரசிகர்கள் இதை நடிப்பா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News