Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

அடுத்தடுத்த படங்களென கமிட்டாகும் அதிதி ஷங்கர்‌ டோலிவுட்டில் நுழைகிறாரா ?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி, மருத்துவம் படித்து டாக்டராக பணியாற்றி வந்தார். அவர், கார்த்தி நடித்த ‘விருமன்’ திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து, சிவகார்த்திகேயனுடன் ‘மாவீரன்’ படத்தில் நடித்தார்.

தற்போது, அதர்வா முரளியின் தம்பி ஆகாஷ் முரளி ஜோடியாக விஷ்ணுவர்தன் இயக்கும் ‘நேசிப்பாயா’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், பெல்லம்கொண்டா சாய் சீனிவாஸ் ஹீரோவாக நடிக்கும் ஒரு தெலுங்கு படத்தின் மூலம் அதிதி ஷங்கர் தெலுங்கில் அறிமுகமாகிறார். விஜய் கனகமெடலா இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் ஹைதராபாத்தில் தொடங்குகிறது. அதிதிக்கு தெலுங்கு மொழியில் சரளமாக பேசத் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News