கடந்த செப்டம்பர் மாதம் ஆசிஃப் அலி நடிப்பில் தின்சித் அய்யதன் இயக்கத்தில் வெளியானது மலையாள திரைப்படமான கிஷ்கிந்தா காண்டம். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.ஆசிஃப் அலி அடுத்ததாக ரேகசித்திரம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.இப்படம் கடந்த 9 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவ்வேற்பை பெற்று வருகிறது. திரைப்படத்தில் மமூட்டி சிறப்பு தோற்றம் அளித்துள்ளது கூடுதல் சிறப்பாகும். இந்நிலையில் திரைப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் 10.2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. திரைப்பட காட்சிகள் பல இடத்தில் அதிகரித்துள்ளது.இப்படத்தை ஜோஃபின் டி சாக்கோ இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் மம்மூட்டி மற்றும் மஞ்சு வாரியர் இணைந்து நடித்த தி பிரீஸ்ட் படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more