எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் திருமால் ரெட்டி மற்றும் அனில் கடியாலா இணைந்து தயாரிக்கும் படம் ‘சுப்ரமண்யா’. இதில் நடிகரும் டப்பிங் கலைஞருமான பி. ரவிசங்கரின் மகன் அத்வே இந்த படத்தின் நாயகனாக அறிமுகமாகிறார். மற்ற நடிகர், நடிகைகள் தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளிவரவுள்ளன. இந்த படத்தை பி. ரவிசங்கர் இயக்க, ரவி பஸ்ரூர் இசையமைத்து, விக்னேஷ் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இயக்குனர் பி. ரவிசங்கர் படத்தின் பற்றி கருத்து தெரிவித்தபோது, “இப்போது படத்தின் பணிகள் 60 சதவீதம் முடிவடைந்துள்ளன. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்பையில் உள்ள ரெட் சில்லீஸ் ஸ்டுடியோவில் நடைப்பெறுகிறது. தொழில்நுட்ப ரீதியில் மிக உயர்தர வல்லுநர்களின் செயல்பாடுகளால் உருவாகி வருகிறது. இது பேண்டசி த்ரில்லர் வகையில் உருவாகும் படம். தமிழுடன் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் பான் இந்தியா படமாக வெளியாகும்” என்றார்.