இயக்குநர் விக்னேஷ் சிவன் ‘போடா போடி’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதில் சிலம்பரசன் மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தனர். 2012 ஆம் ஆண்டு வெளியான ‘போடா போடி’ தோல்வியடைந்தது. இதனால், மூன்று ஆண்டுகள் திரைப்படம் இயக்காமல் இருந்தார். அதன்பின், விக்னேஷ் ‘நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கினார். தனுஷின் தயாரிப்பில் உருவான இப்படத்தில் நயன்தாரா நடித்தார். இப்படம் மிகப் பெரிய வெற்றியை கண்டது, இதன் மூலம் அனைவரும் கவனிப்பவராக மாறினார் விக்னேஷ்.

‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பு வேலைகளில் விக்னேஷ் மற்றும் நயன்தாரா காதலித்தனர். 2022 ஆம் ஆண்டு ஜூன் 9 அன்று திருமணம் செய்துகொண்டனர்.அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில், நயன்தாரா படங்களில் நடித்துக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி இரண்டாவது திருமண நாளை ஹாங்காங்கில் கொண்டாடினர்.






சமூக வலைதளங்களில் தீவிர ஆர்வம் கொண்ட நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதி இந்த புகைப்படங்களை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தனர். அதில், இரண்டு குழந்தைகளுடன் படகில் சென்ற புகைப்படங்கள், அவரது மகன்கள் இருவரும் ட்ரவுசர்கள் அணிந்து மிகவும் அழகாக இருக்கிறார்கள்.மேலும், விக்னேஷ் ஒரு வீடியோவை பகிர்ந்தார், அதில் நயன்தாராவை தூக்கி விளையாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த பதிவில், “திருமண நாள் வாழ்த்துகள்.

உன்னை திருமணம் செய்து கொண்டது என் வாழ்வின் சிறந்த நிகழ்வு. என் உயிரே, உலகமே நீ தான். உன்னை மிகவும் நேசிக்கிறேன் என் தங்கமே. இன்னும் நிறைய வேடிக்கையான நேரங்கள், நினைவுகள் மற்றும் வெற்றிகரமான தருணங்களுக்கு நீண்ட தூரம் உன்னுடன் செல்ல வேண்டும். எப்போதும் நம்முடன் இருந்து நம்மைக் காத்து, நமது பெரிய லட்சியங்களை வெற்றிகொள்ள இறைவனைப் பிரார்த்திக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.