Monday, November 4, 2024

வேதிகா கடும் உழைப்பாளி பிரபுதேவா புகழாரம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பேட்ட ராப் என்ற படத்தில் நடித்துள்ளார் பிரபுதேவா‌ இப்படத்தில் நடிகை வேதிகா பாலிவுட் நடிகை சன்னி லியோன் மற்றும் பெருமாள், விவேக் பிரசன்னா, ரியாஸ் கான், ராஜீவ் பிள்ளை, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.வருகிற 27ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் இசைவெளியீட்டு விழாவின்போது பேசிய பிரபுதேவா, வேதிகா கடும் உழைப்பாளி. ஒவ்வொரு காட்சிக்கும் தன்னை நன்கு தயார்படுத்திக் கொண்டு வருவார். திறமையான நடிகை. இல்லையென்றால் இயக்குநர் பாலா படத்தின் வாய்ப்பு கிடைத்திருக்குமா. அவருடைய கடும் உழைப்பை இந்தப் படத்தில் நேரில் கண்டு வியந்து இருக்கிறேன். சன்னி லியோன் நடிகை என்பது கடந்து மனிதநேயம் மிக்கவர். அனைவரையும் நேசிப்பவர், மதிப்பவர். அவர் தன்னுடைய அறக்கட்டளைகள் மூலம் ஏராளமான உதவிகளை செய்து வருகிறார் என்றார்.

- Advertisement -

Read more

Local News