Saturday, September 14, 2024

வேட்டையன் படத்தின் டப்பிங்-க்க கூலி படத்தின் படப்பிடிப்பில் இருந்து 5 நாட்கள் பிரேக் எடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தா. சே. ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வேட்டையன்’. இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்க, அனிரூத் இசையமைத்துள்ளார். இப்படம் போலி என்கவுன்டர் சம்பவங்களை மையமாக கொண்ட கதையில் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினிகாந்த் இப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து, தற்போது பிற பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் 10 ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், அதற்கான டப்பிங் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, ரஜினிகாந்த் டப்பிங் ஸ்டுடியோவில் வசனம் பேசும் வீடியோ வெளியிடப்பட்டது. ‘வேட்டையன்’ படத்தின் டப்பிங் பணிக்காக, ரஜினிகாந்த் அவரது ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பில் இருந்து 5 நாட்கள் இடைவெளி பெற்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News