Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்கள்‌‌… உதவிக்கரம் நீட்டிய நடிகர் சிம்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பெய்து வரும் மழையை இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என அம்மாநில முதல்வர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆந்திராவின் குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களும், குறிப்பாக விஜயவாடா, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த சூழலில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, ஆந்திரா, தெலங்கானா முதலமைச்சர்களின் பொது நிவாரண நிதிக்குத் தெலுங்கு திரைப் பிரபலங்கள் நிதி வழங்கி வருகின்றனர். அதன் அடிப்படையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான பவன் கல்யாண்,பிரபாஸ், மகேஷ் பாபு, சிரஞ்சீவி, பாலய்யா, பவன் கல்யாண், ஜூனியர் என்.டி.ஆர். அல்லு அர்ஜுன் ஆகியோர் நிதி அளித்து உதிவினர்.

இந்நிலையில் தமிழ் சினிமவின் முன்னணி நடிகரான சிம்பு 6 லட்ச ரூபாய் நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். தமிழ் நடிகர் ஆந்திராவில் நடந்த பேரிடருக்காக நிதிக் கொடுத்தது பாராட்டுக்குரியது என ரசிகர்கள் மகிழ்ந்து வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News