Tuesday, November 19, 2024

வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்த திட்டமா? தென்னிந்திய நடிகர் சங்கம் ஆலோசனை என தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட திட்டம் பல பிரச்சனைகள் மற்றும் வழக்குகளால் தடைபட்டு வந்த நிலையில், கட்டிடப் பணிகள் தற்போது மீண்டும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகளாக முன்னேற்றமில்லாமல் கிடந்த கட்டிடத்தை விரைவாக முடிக்க தற்போதைய நிர்வாகக் குழு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

நடிகர்கள் கமல்ஹாசன், விஜய், நெப்போலியன், தனுஷ், கார்த்தி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தலா 1 கோடி ரூபாய் நிதி வழங்கியிருந்தனர். இதனால் கடந்த ஏப்ரல் மாதம் கட்டிடப் பணிகள் மீண்டும் தொடங்கியன. இருப்பினும், இன்னும் சில கோடிகள் தேவைப்பட்டு வருகிறது என்பதால், வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி நிதி திரட்டுவதற்கான ஆலோசனை நடைபெறுகிறது.

நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் சமீபத்தில் ரஜினிகாந்த்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதற்குப்பிறகு நடிகர் கமல்ஹாசனையும் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். விரைவில் கலை விழா குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News