Tuesday, July 2, 2024

‘வெப்பன்’ படம் எப்படி இருக்கு? – திரை விமர்சனம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

வசந்த் ரவி என்ற பிரபல யூடியூபரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான நபர், மனிதர்களின் சாதாரண திறன்களை மீறிய சக்திகள் கொண்டவர்கள் இந்த உலகில் உள்ளார்கள் என நம்புகிறார். மற்றொருபுறம், பளாக் சொசைட்டி என்ற ரகசியக் குழுவையும், மனிதர்களை பலிகடாவாக்கும் ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ளும் பயோடெக் நிறுவனத்தை நடத்தி வருகிறார் வில்லன் ராஜீவ் மேனன்.

தேனியில் ஒரு அதிசய நிகழ்வு நடக்க, வசந்த் ரவி தனது சேனலுக்காக கண்டெண்ட் தேடி அங்கு பயணிக்கிறார். அப்புறம், தனது ப்ளாக் சொசைட்டி உறுப்பினர்கள் தொடர்ந்து உயிரிழப்பதற்கு காரணமாக ஒரு சூப்பர் ஹியூமன் இருக்கிறாரா என்பதை கண்டறிய ராஜீவ் மேனன் ஆட்களும் தேனிக்குப் பயணிக்கிறார்கள். இருவரும் ஒரு இடத்தில் சந்திக்க, இருவரும் தேடி வந்த சூப்பர் ஹியூமனை கண்டுபிடிக்கிறார்களா, வசந்த் ரவிக்கும் அந்த குழுவுக்கும் என்ன சம்பந்தம், தேனியில் அமைதியாக வாழும் சத்யாஜ் யார் என்பன போன்ற கேள்விகளுக்கு ட்விஸ்ட்டுகள் மற்றும் சர்ப்ரைஸ்களுடன் பதில் சொல்ல முயற்சிக்கின்றனர். இந்த முயற்சி வெற்றி பெற்றதா?

படத்தின் நாயகன் வசந்த் ரவி. அவர் ஒரு சாதாரண யூடியூபராகவும், சூழலியல் பற்றிக் கற்பித்தலும் முதல் பாதியில் “இவர் என்ன துணைக் கதாபாத்திரம் போல் வருகிறார்!” என யோசிக்க வைக்கும் வசந்த் ரவி, இரண்டாம் பாதியில் நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார். கதாபாத்திரத்துக்கு ஏற்ற உடல்வாகுடன் வசந்த் ரவி பொருந்திப் போனாலும், மிகை நடிப்பை சற்று தவிர்க்கலாம்.

சத்யராஜ் கதாபாத்திரம் சூப்பர் ஹியூமனாக பிரபலமாக மாறுகிறது. சந்திரமுகி பாம்பு கணக்காய் எங்கே எங்கே எனத் தேட வைத்து, இடைவேளையின்போது மாஸாக அறிமுகமாகிறார். எதிர்பார்த்ததை விட குறைவான ஸ்க்ரீன் டைம் இருந்தாலும், யானையுடன் விளையாடுவது, வில்லன்களை புரட்டி அடிப்பது, குடும்பத்தை எண்ணி கலங்குவது என சத்யராஜ் கதாபாத்திரம் அழுத்தமாக இருக்கிறது. ஏஐ சத்யராஜ் ப்ளாஷ்பேக் காட்சிகளில் வருவதாக எதிர்பார்த்த நிலையில், அவர் எங்கே எனத் தேட வேண்டியுள்ளது.

நடிகை தான்யா ஹோப் தமிழ் சினிமாவின் வழக்கமான பொம்மை நாயகியாக காட்சியளிக்கிறார். ஸ்டைலிஷ் ஹை சொசைட்டி வில்லனாக ராஜீவ் மேனன், அவரது அடியாள் ராஜீவ் பிள்ளை ஆகியோர் பெரிய அழுத்தமின்றி கதாபாத்திரத்துக்கு தேவையானதைச் செய்கிறார்கள்.

படத்தில் நிறையும் குறையும் என்னவென்றால், ஹிட்லர் காலத்தில் சிப்பாய்களுக்கு கொடுக்க உருவாக்கப்பட்ட சூப்பர் ஹியூமன் சீரம், அதை இந்தியாவுக்கு திருடி வருவது, பல ஆண்டுகள் கழித்து தன் உயிருக்குப் போராடும் மகனுக்கு செலுத்தி பிழைக்க வைக்கும் அப்பா என கற்பனை இருந்தாலும், சூப்பர் ஹியூமன் படத்தில் லாஜிக் பார்க்காமல் சுவாரஸ்யத்துடன் படம் பார்க்க வேண்டும். முதல் பாதியில் சத்யராஜை காட்டாமல் சூப்பர் ஹியூமன் தேடுதல் வேட்டை நமக்கு சலிப்பை தருகிறது.

மற்றொருபுறம் ஆரா, குண்டலினி மூலம் சூப்பர் பவரை எழுப்புவது, புராணக் கதைகள் என பேசி வசமாக சிக்கிக் கொண்டோமா என யோசிக்க வைக்கிறது. நீட்டி முழுக்கி பேசிப் பேசி முதல் பாதியை வசனங்களாலேயே விளக்குவதைத் தவிர்த்து, காட்சிகளால் கதையை நடத்த முயற்சிக்கலாம். மொத்தத்தில் படம் ஓகேதான்.

- Advertisement -

Read more

Local News