வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட்” படத்தில் நடித்துள்ள விஜய் இதன் பிறகு, எச்.வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் நடிப்பதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு அரசியலில் முழுமையாக நுழைய உள்ளார். சமீபத்தில், தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்த விஜய், கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்கு சரியான இடத்தை தேடிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில்தான், விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனுமதி கோரி ஒரு கடிதம் கொடுத்துள்ளார்.
மாநாடு நடத்த அனுமதி கோரிய அந்தக் கடிதத்தில், த.வெ.க மாநாட்டில் 1.5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த அறிக்கையில் இந்த மாநாட்டிற்கான திட்டமிடல் குறித்த விபரங்களும் விரிவாக கூறப்பட்டுள்ளது.