வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்” ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்தப் படத்தை சுருக்கமாக “தி கோட்” என அழைக்கின்றனர். இதில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மோகன், சினேகா, லைலா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, வைபவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதனை முன்னிட்டு, படத்தின் டிரைலர் பற்றிய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 17ம் தேதி டிரைலர் வெளியாகும் என புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.
முன்னதாக, படத்தின் அறிவிப்பு நேற்றே வெளியாகும் என கல்பாத்தி அர்ச்சனா குறிப்பிட்டிருந்தார். ஆனால், பணிகள் முடிக்கப்படாத காரணத்தால் அதனை அறிவிக்க முடியவில்லை. இன்று நண்பகலில், வெங்கட் பிரபு, கண்டிப்பாக இன்று அறிவிப்பு வெளியாகும் என பதிவிட்டார். அதன்படி, மாலையில் அப்டேட் வெளியானது.