Thursday, September 5, 2024

விஜய்யின் ‘தி கோட் ‘ எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தி கோட். தி கிரேட்டஸ் ஆஃப் ஆல் டைம். பெயருக்கு ஏற்றார்போல் இப்படம் தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பையே பெற்று வருகிறது. படத்தின் கதையை பார்த்தோம் என்றால் நாடுகளில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் ஸ்பெஷல் SATS என்ற பிரிவில் அண்டர்கவர் அதிகாரியாக பணியாற்றுகிறார் காந்தி கதாபாத்திரத்தில் நடிகர் விஜய். ஒரு மிஷனின் போது தனது ஐந்து வயது மகன் ஜீவனை இழந்துவிட்டதாக நினைத்து மனரீதியாக உடைந்துவிடுகிறார் காந்தி, ஆனால் பல வருடங்கள் கழித்து எதிர்பாராத இடத்தில் மீண்டும் ஜீவனை அதாவது இளைய தளபதி சந்திக்கிறார். இதனைத் தொடர்ந்து தளபதியும் இளைய தளபதியும் இணைந்து என்ன செய்கிறார்கள், அவற்றுக்குப் பின்னால் உள்ள காரணங்கள் என்ன என்பது ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் கதை எனலாம்.

இரட்டை வேடங்களில் நடித்துள்ளனர் நடிகர் விஜய். கடைசியாக அட்லி இயக்கத்தில் பிகில் படத்தில் அப்பா மற்றும் மகன் வேடத்தில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் அவரது பரிணாமம் வேறுபட்டதாக உள்ளது. கலாட்டா நிறைந்த SATS ஏஜென்ட்டாகவும் கணவராகவும், தந்தையாகவும், மகனாகவும் பல்வேறு பரிமாணங்களில் விஜய் நடித்துள்ளார். இதில் காந்தி என்னும் கதாபாத்திரம் வழக்கமாக நாம் பார்த்த விஜய்தான். ஆனால் ஜீவனாக விஜய் எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இன்றி நகைச்சுவை மற்றும் சின்ன சின்ன மேனரிசங்கள் மூலம் புதுமையான வண்ணம் காட்டுகிறார். சில இடங்களில் அதுவே ஓவர்டோஸ் ஆகினாலும், படத்தை பெருமளவில் தாங்கியிருப்பதும் விஜயின் நடிப்புதான். பல ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் – சினேகா கூட்டணி மீண்டும் சேரும் காட்சிகள் மிகவும் மகிழ்வாக ஸ்வீட்டாக இருக்கும்.

இந்த சாட்ஸ் குழுவில் வலுவான பாத்திரமாக இருக்கும் பிரஷாந்த், சில காட்சிகளில் கைதட்டும் வகையில் நடிக்கிறார். அவர்களுடன் ஜெயராம், பிரபுதேவா, லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் போன்ற பலரும் நடித்துள்ளனர். அனைவரும் தங்கள் கதாபாத்திரங்களில் நன்றாகவே நடித்துள்ளார்கள். மற்றொரு நாயகியாக வரும் மீனாக்ஷி சௌத்ரிக்குப் பெரிய காட்சிகள் இல்லை. இரண்டாம் பாதியின் பரபரப்பை சமன்படுத்த யோகி பாபுவின் காமெடி ஒன்லைனர்கள் கவுண்ட்டர்கள் உதவுகின்றன. முக்கிய வில்லனாக மோகன் தேர்வு சுவாரஸ்யமாக இருந்தாலும், பெரிதாக பேசப்படும் அளவிற்கு வில்லனாக ஜொலித்தாரா என்று கேட்டால் நூற்றுக்கு ஐம்பது தான் எனலாம்.

இந்த தீவிரவாத தடுப்பு குழுவின் மிஷனில் இருந்து ஸ்டார் ஆகிறது கதை. விஜய், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகிய நான்கு பேரின் நட்பு, வீட்டிற்குத் தெரியாமல் அண்டர்கவர் ஏஜென்ட்களாக இருந்து மனைவிகளிடம் அவர்கள் படும் பாடு என ஆரம்பக் காட்சிகள் ‘நாஸ்டால்ஜியா விஜய் படமாக’ சுவாரஸ்யப்படுத்துகின்றன. SATS மிஷன்களும் அதிரடி ஆக்ஷனுக்குப் பொருத்தமாக உள்ளன. ஆனால் அந்த மிஷன்களில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெளிவாக இல்லை. அதேபோல் ஐபிஎல் காட்சிகள்‘என்ன மேட்ச், என்ன டீமு’ என்பது தெரியாமல் நாமும் தொலைவிலிருந்து அதைப் பார்க்க வேண்டியதாக உள்ளது. இது படத்தின் மைனஸ் பாயிண்ட் ஆகிறது. பல நாடுகள் சுற்றும் கதையை கேமரா அழகாக, பிரமாண்டமாக கண்ணுக்கு விருந்தாக படம்பிடிக்கபட்டுள்ளது எனலாம்.

முதல் பாதியை இப்போது ஓரம் வைத்துவிட்டு இரண்டாம் பாதியை பார்த்தோம் என்றால் பாதி ஹீரோவும் வில்லனும் மோதிக் கொண்டும் துரத்திக்கொண்டும் இருப்பதே ஆகும். இதை மேலும் சுவாரஸ்யமாக எழுதத் தவறியிருக்கின்றனர் வெங்கட் பிரபு, எழிலரசு, குணசேகரன் கூட்டணி. நெருக்கமானவர்களைக் கடத்துவது, மிரட்டுவது போன்ற 80-களின், 90-களின் படங்களின் போல திரைக்கதை நகர்கிறது. மேலும் 20-30 நிமிடங்களைப் பயனுள்ளதாக செதுக்கலாம். இதனால் இரண்டாம் பாதி முழுவதும் அந்த 20 நிமிட கிளைமாக்ஸ் காட்சிகளையே நம்பியுள்ளது. அதிலும் திரைக்கதை ரீதியாக சுவாரஸ்யம் குறைவாக இருந்தாலும், ‘சிஎஸ்கே’ ரெஃபரென்ஸ், சர்பிரைஸ் கேமியோ, இரு விஜய் கதாபாத்திரங்களையும் பயன்படுத்திய விதம் போன்ற சில விஷயங்கள் வெங்கட் பிரபுவின் வெற்றியாக அமைந்திருக்கின்றன.

- Advertisement -

Read more

Local News