கேரளாவில் பெய்த பெரும் மழையால் வயநாடு மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலர் மண்ணோடு மண்ணாக புதைந்ததால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கேரளா மாநிலத்திற்கு உதவ பலரும் முன்வந்துள்ளனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விக்ரம் தனது பங்கிற்கு முதல் ஆளாய் ரூ.20 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு இதை வழங்கியுள்ளார்.இதனை அவரது மேலாளர் எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.
கடந்த 2018-ல் கேரளாவில் ஏற்பட்ட மழை பாதிப்பின் போது விக்ரம் ரூ.35 லட்சம் நிதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.