Thursday, August 8, 2024

வடநாட்டில் ஏற்பட்ட பேரிடர் பாதிப்பிற்காக ரூ.25 லட்சம் நிதியுதவியும் மேலும் அத்தியாவசிய பொருட்களை வழங்கிய டோவினோ தாமஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயற்கையின் சீற்றத்திற்கு அடிக்கடி ஆளாவதில் நம் பக்கத்தில் உள்ள கேரள மாநிலமும் ஒன்று. கடந்த 2018ல் மிகப் பெரிய இயற்கை பேரழிவை சந்தித்து அதில் இருந்து மீண்டு வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் வயநாடு பகுதியில் ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பல பேரின் நிலை என்னவென்று தெரியாமல் தற்போது தேடுதல் பணிகளும் பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணப் பணிகளும் துரித கதியில் நடந்து வருகின்றன. திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற அளவு நிவாரண நிதியை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது மலையாளம் நடிகர் டொவினோ தாமஸ் தனது பங்களிப்பாக ரூபாய் 25 லட்சம் நிதி வழங்கியுள்ளார். அது மட்டுமல்ல உணவு வழங்குவதற்கு என கிட்டத்தட்ட 1000 எவர்சில்வர் தட்டுக்கள் மற்றும் மேலும் சில அத்தியாவசிய பொருட்களை சிலவற்றையும் அவர் வழங்கியுள்ளார்.

இதேபோன்று கடந்த 2018ல் கேரளாவில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தின் போதும் அவர் தானே களத்தில் இறங்கி மீட்பு பணிகளில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News