தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் க்ரைம் திரில்லர் கதைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதைதான் இந்தப் படம்.கோயம்புத்தூரில் அசிஸ்டென்ட் கமிஷனராக பணிபுரிபவர் விதார்த்.
ஒரு இரவு யாரோ ஒருவர் சாலையில் காண்பவர்களை தாக்கி, சிலரைக் கொலையுடன் செய்கிறார். அந்த நபர் யார் என விதார்த் தலைமையிலான போலீஸ் குழுவினர் தேட முயல்கிறார்கள். அந்த நபரை கண்டுபிடிக்கும் போது அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அதுதான் படத்தின் மீதிக் கதை.டெபுடி கமிஷனராக கம்பீரமாக இல்லாமல், ஒரு இயல்பான போலீசாகவே நடித்துள்ளார் விதார்த். மனைவியைக் கொஞ்சுவதற்கும் நேரமில்லாமல் கடமைக்காக ஓடிக் கொண்டிருக்கிறார். போலீஸ் வாகனத்தில் பயணித்துக் கொண்டே ஒயர்லெஸ் மூலம் பேசுவதில் அவருடைய நேரம் கடந்து விடுகிறது.
பெரிய விசாரணை ஏதோ நடக்கிறது என்று எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான். அவருடைய கதாபாத்திரத்தை ஒரு இன்ஸ்பெக்டராகவே காட்டியிருக்கலாம்.விதார்தின் மனைவியாக ஸ்வேதா டோரத்தி சில காட்சிகளில் மட்டுமே தோன்றுகிறார். இன்னும் சில முக்கிய துணை கதாபாத்திரங்கள் உள்ளன, ஆனால் அவற்றைப் பற்றி பேசினால் சற்றே இருக்கும் சஸ்பென்ஸ் மாறிவிடும்.
பிளாஷ்பேக் காட்சியில் வரும் அந்த இரண்டு துணை கதாபாத்திரங்கள்தான் படத்தின் திருப்புமுனைக்குக் காரணம்.ஒரே இரவு நாளில் நடக்கும் கதை என்பதால் இரவுக் காட்சிகள் அதிகம், அதிலும் சாலையோர காட்சிகள் நிறைய. இதற்காக ஒளிப்பதிவாளர் ஞானசௌந்தர் மிகுந்த உழைப்பு எடுத்திருப்பார். பிரவீன் அவர்களின் பின்னணி இசை பரவாயில்லை.ஒரு த்ரில்லர் படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக நகர வேண்டும். அடுத்தடுத்த தருணங்களில் என்ன நடக்கப் போகிறது என்ற ஆர்வத்தையும் பதட்டத்தையும் தூண்டவில்லை. மொத்தத்தில், இப்படம் சற்றே சறுக்கல் தான்.