Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

லண்டனில் தொடங்கவுள்ள யாஷின் ‘டாக்சிக்’ படப்பிடிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில், கே.ஜி.எப் புகழ் நடிகர் யஷ் தனது 19வது படமாக ‘டாக்சிக்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதில் யஷுக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா, கதாநாயகியாக கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கின்றனர். தற்போது, யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. மொத்த படப்பிடிப்பை 200 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில், 150 நாட்கள் பெரும்பாலான படப்பிடிப்பை லண்டனில் படமாக்க திட்டமிட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News