சூர்யாவின் 44வது திரைப்படமான ‘ரெட்ரோ’-வை பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மென்ட் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணியாற்றியுள்ளார்.

இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.






இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறுகையில், ‘ரெட்ரோ’ ஒரு காதல் திரைப்படமாக இருக்கும், அதே நேரத்தில் அதில் நிறைய ஆக்ஷன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, ஒரு பாடலுக்கு நடிகை ஸ்ரேயா சிறப்பு நடனம் ஆடியுள்ளார். இந்நிலையில், ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
படத்தின் ஆடியோ உரிமையை ‘டி-சீரிஸ்’ பெற்றுள்ளது. இதன் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை ‘காமிக்’ வடிவத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக, வாரந்தோறும் ஒரு புதிய எபிசோடு வெளியாகும். முதல் எபிசோடு தற்போது வெளியான நிலையில், அதில் ‘டைட்டில் டீசர்’ எப்படி உருவானது என்பதை விளக்கி உள்ளனர்.அந்த காமிக் காட்சியில், கார்த்திக் சுப்பராஜ், சூர்யாவிடம் “எப்பொழுதும் மழை வரலாம், அதனால் ‘சிங்கிள் டேக்’ல எடுக்கலாமா?” என கேட்க, சூர்யா “சிங்கிள் டேக்கா? பண்ணிரலாம்!” என உறுதியாக பதிலளிக்கிறார்.இந்த புதிய விளம்பர யுக்தி படத்திற்கான ப்ரோமோஷனில் புதுமையை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரந்தோறும் ஒரு ‘காமிக் ஸ்டைல்’ எபிசோடு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.