’96’ பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘மெய்யழகன்’ படத்தை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கார்த்தியுடன் அரவிந்த் சாமி, ஸ்ரீ திவ்யா, மற்றும் ஸ்வாதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


அதைத்தொடர்ந்து, கார்த்தி தனது 26வது படமாக நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் எம்.ஜி.ஆர் ரசிகராக நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் பல சர்ப்ரைஸ் பேண்டஸி அம்சங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.


இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், மற்றும் கிர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் செயல்படுகிறார். தற்போது, இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்டமான அரங்கம் அமைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாத இறுதிக்குள் முழு படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு தீவிரமாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், கடந்த மாதம் ‘மெய்யழகன்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுற்றது. இப்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை வரும் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.