நடிகரும், டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸ் ‘மாற்றம்’ என்ற அறக்கட்டளை மூலம் ஏழை மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். KPY பாலாவும் இதில் இணைந்துள்ளார். சமீபத்தில், விவசாயிகளுக்கு 10 டிராக்டர்கள் வழங்கப்பட்டது.அறக்கட்டளை செயல்பாடுகளை பாராட்டி பலரும் அதில் இணைந்துள்ளனர்.
நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்.ஜே. சூர்யா மாற்றத்தில் இணைந்துள்ளார். இது குறித்து ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.”என் சொந்த பணத்தில் 10 டிராக்டர்களை விவசாயிகளுக்கு வழங்கியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். எஸ்.ஜே.சூர்யா அவர்களின் உதவியால் காஞ்சிபுரத்தில் பத்ரி என்ற ஒருவருக்கு 11வது டிராக்டரை வழங்கியுள்ளோம். அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் நன்றி” என்று கூறியுள்ளார்
.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய எஸ்.ஜே சூர்யா மாற்றம் அமைப்பின் வங்கி கணக்கு பூமியில் இல்லை சொர்க்கத்தில் தான் இருக்கிறது என்று கலகலப்பாக கூறினார்.