நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் கூலி படத்தின் முக்கிய அப்டேட் தற்போது போஸ்டர் ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்தின் 171-ஆவது படமாக நடிகர் கூலி உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார், மேலும் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கியமான கதாபாத்திரங்களில் ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா ஆகியோர் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் கதாபாத்திரங்களின் அறிமுகங்கள் நாளை (ஆகஸ்ட் 28) மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.