Tuesday, July 2, 2024

மூன்று நாட்களில் எதிர்பாராத வசூலை குவித்து தள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -
LISTEN TO PLAY AUDIO NEWS 👆

குரங்கு பொம்மை படத்தை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘மகாராஜா’. இந்தப் படம் நல்ல விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. இப்படத்தின் இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகர் மற்றும் நடிகைகள என அனைவரின் உழைப்பும் திறமையும் பாராட்டப்பட்டு வருகிறது.

இப்படம் இதுவரை இந்த ஆண்டின் சிறந்த படமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் விடுமுறை நாட்கள் காரணமாக இப்படத்திற்கு கூடுதல் அட்வான்டேஜ் கிடைத்ததாக கூறப்படுகிறது.இப்படத்தின் வசூல் எதிர்பார்த்ததை விடவும் அதிகமாக உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்தநிலையில் படத் தயாரிப்பு நிறுவனமே கடந்த மூன்று நாட்களில் ரூ.32 கோடி வசூலாகியுள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், 2024ல் தமிழ் சினிமாவில் முதல் வார இறுதியில் அதிகத் தொகை வசூலித்த படம் இதுவாகும். தொடர்ந்து தோல்விகள் கண்ட விஜய் சேதுபதிக்கு இந்தப் படம் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.விரைவில் இப்படத்தின் வசூல் 50 கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News