Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

முகத்தில் ரத்தத்துடன் செல்ஃபி பிரியங்கா சோப்ரா… என்னாச்சுனு பதறிய ரசிகர்கள்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த 2000-ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா, தமிழில் 2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன்’ திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். இவர் 2018-ம் ஆண்டு பாடகரும் நடிகருமான நிக் ஜோனாசை திருமணம் செய்துகொண்டார். அமெரிக்காவில் குடியேறி ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது ‘தி பிளப்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். இதில் கடல் கொள்ளைக்காரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 19-ம் நூற்றாண்டில் மெர்சல் என்ற பெண் தனது குடும்பத்தை காப்பாற்ற போராடும் கதை அம்சத்தில் அதிரடி சண்டை சாகச படமாக உருவாகிறது. இந்த படத்தில் கார்ல் அர்பன், இஸ்மாயில் குரூஸ் கோர்டோவா, சபியா ஓக்லி-கிரீன் மற்றும் வேதாந்தேன் நைடூ உள்ளிட்ட திறமையான நடிகர்கள் நடிக்கின்றனர். இதில் மெர்சல் கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். இந்த படத்தினை இயக்குனர் பிராங்க் ஈ பிளவர்ஸ் இயக்குகிறார்.

இந்தநிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது நடிக்கும் ‘தி பிளப்’ படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் அவரது முகத்தில் போலியான ரத்தம் வழிவது போல இருந்தது. இது அவரது கடினமான உழைப்பையும், அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்படும் அனுபவத்தை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ள இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளார். மேலும், அவர் ஜான் சீனா நடிக்கும் ‘ஹெட்ஸ் ஆப் ஸ்டேட்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News