Saturday, September 14, 2024

மீண்டும் மீண்டுமா? தொடர்ந்து பரவும் வதந்திகள்… கறார் காட்டிய திவ்யா ஸ்பந்தனா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கன்னடம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா. தமிழில் அவர் குத்து, கிரி, பொள்ளாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி போன்ற படங்களில் நடித்துள்ளார். 

திவ்யாவைச் சுற்றி பல்வேறு வதந்திகள் பரவ ஆரம்பித்தன. அந்த தகவல் வெளிவந்த போது, திவ்யா வெளிநாட்டில் இருந்தார். அதன்பின், திவ்யா ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி பலமுறை பரவியது. ஆனால், இவை அனைத்தும் வெறும் வதந்திகள் என்பதும் உறுதிசெய்யப்பட்டது. 

இந்நிலையில், அவர் திருமணம் செய்து கொண்டதாக மீண்டும் செய்திகள் வெளிவந்தன. இதை மறுத்து, திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவை மிகக்கோபமாகப் பகிர்ந்துள்ளார். அதில், “எனக்கு மீடியா பலமுறை திருமணம் செய்து வைத்துவிட்டது. எத்தனை முறை என்று நான் கூட மறந்துவிட்டேன். உண்மையில் நான் திருமணம் செய்துகொண்டால், அதை நானே தெரிவிப்பேன். அதிகாரபூர்வமற்ற தகவல்களை நம்புவது மற்றும் பரப்புவதை நிறுத்துங்கள்,” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News