Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

மிரட்டலான தோற்றத்தில் சியான் விக்ரம்… வெளியானது ‘தங்கலான்’ பட ட்ரெய்லர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பா ரஞ்சித் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில், விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தங்கலான்’. இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

சுதந்திர காலத்துக்கு முந்தைய படம், கேஜிஎப் என அழைக்கப்படும் கோலார் தங்க வயல் சுரங்கம் உருவாகும் ஆரம்ப கட்டம் என்பது மட்டும் டிரைலரைப் பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது. அங்குள்ள பூர்வகுடிகளுக்கும், அவர்களை அடிமைப்படுத்தி தங்கத்தைத் தோண்டி எடுக்க முயலும் ஆங்கிலேய அதிகாரிக்கும் இடையில் நடக்கும் போராட்டம்தான் படத்தின் கதையாக இருக்கலாம் என தெரிகிறது.

அடையாளமே தெரியாத அளவிற்கான தோற்ற மாற்றத்தில் விக்ரம் முன் தலையில் முடியில்லாமல், பின் தலையில் சடை விழுந்த நீளமான முடி, இடுப்பில் ஒரே ஒரு சிறிய துண்டு, கையில் நீளமான கம்பு என வழக்கம் போல அவரது நடிப்பில் மிரட்டுகிறார். விக்ரமின் மனைவியாக பார்வதியா அது என அடையாளம் தெரியாத அளவிற்கு இருக்கிறார். சூனியப் பெண்ணாக மாறுபட்ட தோற்றத்தில் மாளவிகா மோகனன் உள்ளார்.

இரண்டு நிமிடம் ஓடும் டிரைலரில் சண்டைக் காட்சிகள் மட்டுமே அதிகம் உள்ளது. இருள் சூழ்ந்த காட்சிகள், இப்படத்தில் இடம்பெறும் கரும்புலி கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் கதை என்னவாக இருக்கப் போகிறது என்பதை நாமாகவே சிலவற்றை யூகிக்க வைக்கிறார்கள்.

- Advertisement -

Read more

Local News