ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்க்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் சிறுவனுக்கு அவனது பொம்மைகள் வழியனுப்புவது போன்ற புகைப்படத்துடன், ‘இதுவே முதல் நாள் பள்ளிக்குச் செல்லும் புகைப்படங்களில் கனமான ஒன்று’ என இன்ஸ்டா கணக்கிலிருந்து பதிவிடப்பட்டிருந்தது. அதைப் பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த். “மழலையர் பள்ளியோ… உயர்நிலை பள்ளியோ… அதே கதைதான். என் மகன்கள் இப்போதும் பொம்மைகளுடன் விளையாடுகின்றனர். சில விசயங்கள் மாறுவதேயில்லை. இந்தக் கதாபாத்திரங்கள் உணர்ச்சிப்பூர்வமானவை..” எனப் பதிவிட்டுள்ளார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more