Saturday, September 14, 2024

மலையாள திரையுலகில் என்ட்ரி கொடுக்கும் இயக்குனரும் நடிகருமான சேரன்… #இஸ்க்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் மற்றும் நடிகர் சேரன். தமிழ் சினிமாவில் வெற்றிக்கொடி கட்டு, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து மற்றும் பாண்டவர் பூமி என பெயர் சொல்லும் படமாக பல சிறந்த வெற்றி படங்களை இயக்கி நடித்துள்ள சேரன், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், தனது நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளதாக தெரிவித்தார். அதன்படி இயக்குநரும், நடிகருமான சேரன் மலையாள திரையுலகில் நடிகராக களம் இறங்குகிறார்.

இது தொடர்பான பதிவில், நண்பர்களே… முதன்முதலாக நீண்டநாள் ஆசையாக இருந்த ஒன்று நிறைவேறி இருக்கிறது.. மலையாள திரைப்படம் ஒன்றில் ஆகச்சிறந்த நடிகரான டொவினோ தாமஸ் உடன் இணைந்து ‘இஸ்க்’ படத்தின் இயக்குனரான அனுராஜ் மனோகர் இயக்கத்தில் நடிக்கிறேன்.. என்றும்போல உங்கள் ஆதரவும் அன்பும் தேவை.. நன்றி,” என குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News