விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா படத்தில் நடித்திருக்கும் நடிகை மம்தா மோகன்தாஸ், தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமா உலகில் திறமையான நடிகையாக வலம் வருபவர்.சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், மம்தா மோகன்தாஸ் தனது சினிமா வாழ்க்கை குறித்து பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

குசேலன் படத்தில் நடித்தபோது, தனக்கும் நடிகை நயன்தாராவுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்னை குறித்து முன்பே பேசியிருந்தார். “குசேலன் படத்தில் நயன்தாராவுக்கே முக்கியமான ரோல் கிடையாது. நான் நடித்துக் கொண்டு இருந்த படத்தின் இயக்குநரிடம் அனுமதி கேட்டு நான்கு நாட்கள் வந்திருந்தேன். ஆனால், முதல் நாளே ஏதோ ஒன்று சரியில்லை என புரிந்தது. அடுத்த இரண்டு நாட்களும் படம் எடுக்கவில்லை,” என்றும் அங்கு படப்பிடிப்பில் நடந்த விஷயங்களை பற்றி கூறியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில், “தயாரிப்பாளர்கள் செலவு செய்யும் பணத்தின் மதிப்பு எனக்குத் தெரியும். சிலர் தங்களை பெரிய ஆர்டிஸ்ட்டாக காட்டிக்கொள்வதற்காக ஏழு, எட்டு அசிஸ்டண்டுகளை வைத்துக் கொள்கின்றனர். இது தேவையற்றது. நான் இரண்டு அசிஸ்டண்ட்கள் மட்டுமே வைத்துள்ளேன். சிலர் தங்களைத் தாங்களே புரோமோட் செய்து, பி.ஆர். டீமிடம் கூறி 10 பேப்பர்களில் சூப்பர் ஸ்டார் என எழுத வைக்கின்றனர். சூப்பர் ஸ்டார் பட்டம் மக்களாகவே கொடுக்க வேண்டும்,” எனக் கூறியுள்ளார். நடிகை நயன்தாராவை மம்தா மோகன்தாஸ் கடுமையாக விமர்சித்துள்ளது சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.