நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘கோட்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்தப் படம் அடுத்த மாதம் 5-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/08/1000064778-1-1024x465.jpg)
படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே, நடிகர் விஜய் தனது அரசியல் களமிறங்குவதை உறுதிசெய்தார். இதன் தொடர்ச்சியாக, தனது கட்சியின் பெயரை “தமிழக வெற்றிக் கழகம்” என்று அறிவித்தார். சமீபத்தில், கட்சியின் கொடி அறிமுகமாகியது. இதனைத் தொடர்ந்து, கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் அடுத்த மாதம் 23-ம் தேதி நடைபெற உள்ளது.
அடுத்த வாரம் ‘தி கோட்’ படம் திரைக்கு வரவுள்ள நிலையிலும், “தமிழக வெற்றிக் கழகம்” கட்சியின் முதல் மாநாடு அடுத்த மாதம் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையிலும், நடிகர் விஜய் தற்போது தனி விமானம் மூலம் சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று சென்னை திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் புறப்படும் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.