அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘புஷ்பா தி ரைஸ்’ திரைப்படம் இந்தியா முழுவதும் 400 கோடிக்கும் மேல் வசூலித்து பெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளிவந்த அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே பெரிதும் கவனம் பெற்றன.
இந்த படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, ‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. ‘புஷ்பா 2 தி ரூல்’ என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படம் டிசம்பர் 6-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ‘புஷ்பா 2 தி ரூல்’ படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் இரண்டு பாடல்களும் வெளியானது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. படத்தை குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
தமிழ்நாடு விநியோக உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. இதனை மகிழ்ச்சியுடன் அந்நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.