Saturday, September 14, 2024

புஷ்பா 2 தள்ளிப்போக பஹத் பாசில் தான் காரணமா?#PUSHPA2

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜூன், பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிக்கும் ‘புஷ்பா 2’ படத்தை முதலில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். படம் ரிலீசை குறித்த பல்வேறு தகவல்கள் கடந்த வாரம் முதல் வெளியாகின. படத்தின் வெளியீடு தள்ளி போகலாம் என்று கூறப்பட்டது. அதன்படி, படத்தை டிசம்பர் 6க்கு தள்ளி வைக்கிறோம் என படக்குழுவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

படம் தள்ளி போனதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். ஆந்திர அரசியலில் ஏற்பட்ட மாற்றமும் ஒரு காரணம் என்கிறார்கள்.மேலும், படத்தின் வேலை திட்டமிட்டபடி முடிக்க முடியாததும் ஒரு காரணம். பஹத் பாசில் கொடுத்த தேதிகளை பயன்படுத்தாமல் விட்டதால், அவர் தொடர்ந்து மலையாளப் படங்களில் நடிக்கவேண்டி, ‘புஷ்பா 2’ குழுவிற்கு தேதிகளை தர முடியவில்லை. சமீபத்தில் அவர் தேதிகளை ஒதுக்கியுள்ளார்.

இவ்வாறு சில காரணங்களால் படத்தை தள்ளி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தயாரிப்பு நிறுவனத்திற்கு 40 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்படலாம் என கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News