Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகிறாரா நடிகை ஸ்ரீலீலா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சூரரைப் போற்று’ படம் மிகப் பெரிய வெற்றி அடைந்து, பல பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றது. இதையடுத்து, இந்த வெற்றி கூட்டணி ‘புறநானூறு’ படத்தின் மூலம் மீண்டும் இணைவதாக தகவல்கள் வெளியானது. இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் என தெரிவிக்கப்பட்டது.

கால்ஷீட் தொடர்பான சிக்கல்கள் காரணமாக, சுதா கொங்கராவின் ‘புறநானூறு’ படத்தில் நடிகர் சூர்யா இணைவது சந்தேகமாக இருந்தது. இதனால் சூர்யாவின் இடத்தில் வேறு ஒரு நடிகரை இப்படத்தில் நடிக்க வைக்க சுதா கொங்கரா முடிவு செய்துள்ளார். இதை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.

சூர்யாவுக்கு பதிலாக இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. இயக்குனர் லோகேஷ் கனகராஜூம் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் பரவியது.இந்நிலையில் தற்போது இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் மூலம் ஸ்ரீலீலா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகும் என்பதையும், இதனால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது என்பதையும் குறிப்பிடலாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News