பாலிவுட் சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவரான ஆலியா பட், 2012-ஆம் ஆண்டு “ஸ்டூடன்ட் ஆஃப் தி இயர்” படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அவருக்கு “கங்குபாய் கதியவாடி” படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. ஆலியா பட் நடித்த “ஹைவே”, “உட்தா பஞ்சாப்”, “டியர் ஜிந்தகி”, “ராஜி”, “கல்லி பாய்”, “ராக்கி ராணி” போன்ற திரைப்படங்கள் மக்களின் பாராட்டைப் பெற்றன.
ஹாலிவுட்டில் “ஆர்ட் ஆஃப் ஸ்டோன்” படத்தில் “வொண்டர் வுமன்” கதாபாத்திரத்தில் நடிக்கும் கால் கோடட் உடன் நடித்துள்ளார். நடிகையாக மட்டுமில்லாமல், தயாரிப்பாளராகவும் ஆலியா பட் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். தற்போதைய நிலையில், அவர் “ஜிக்ரா” என்ற படத்தின் படப்பிடிப்புகளை முடித்துள்ளார். தற்போது இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகர் ரன்பீர் கபூரை, 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராஹா என்ற பெண் குழந்தை கடந்தாண்டு டிசம்பரில் பிறந்தது. மேலும், சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கத்தில், தனது கணவர் ரன்பீருடன் “லவ் அன்ட் வார்” படத்திலும் நடித்து வருகிறார். இந்த ஆண்டும் உலகின் மிகப்பெரிய செல்வாக்கு வாய்ந்த 100 நபர்களின் பட்டியலில் நடிகை ஆலியா பட் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.