Thursday, September 5, 2024

பிக்பாஸ் 8வது சீசனை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி கடந்த 7 சீசன்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்தது. ஆனால், இந்த ஆண்டு நடைபெறவிருந்த 8வது சீசனில் அவர் தொகுத்து வழங்கப் போவதில்லை என்று அவர் ஏற்கனவே அறிவித்துவிட்டார். இதைத் தொடர்ந்து, அந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்ற கேள்விக்கு பல பெயர்கள் அடிபட்டன.

இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி, தற்போது அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஆமாம், ‘வந்தாச்சு புது பிக்பாஸ்’ என்ற அறிவிப்புடன் விஜய் சேதுபதி தோன்றும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக அவர் சில ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதால், அதன் அடிப்படையில் இவர் இந்த நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ளது.

- Advertisement -

Read more

Local News