Tuesday, September 17, 2024

பாலி நடனம் கற்கும் ராஷி கன்னா… அவரின் மார்க்கெட்டை மாற்றிய அரண்மனை 4…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ராஷி கண்ணா நடிப்பில் சமீபத்தில் வெளியான “அரண்மனை 4” படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழில் ராஷி கண்ணா “இமைக்கா நொடிகள்” படத்தில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து அறிமுகமானார். தொடர்ந்து “அடங்கமறு,” “அயோக்கியா,” “சங்கத் தமிழன்” போன்ற படங்களில் நடித்தார்.

“அரண்மனை 4” மூலம், தனது அழகாலும் கவர்ச்சியாலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதற்கு முன், ராஷி கண்ணா, சித்தார்த் மல்ஹோத்ராவுடன் நடித்த “ஃபார்ஸி” வெப் தொடர் மூலம் ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

ராஷி கண்ணா தனது உடலை ஆரோக்கியமாகவும் திறனாகவும் வைத்திருக்க முயற்சிக்கிறார். தினமும் யோகா மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதாகவும், நடனத்தை உடற்பயிற்சியின் ஒரு பகுதியாக சேர்த்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.குறிப்பாக, பாலி நடனத்தை கற்றுக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

“அரண்மனை 4” மற்றும் “ஃபார்ஸி” வெப் தொடர் இரண்டின் வெற்றி, ராஷி கண்ணாவிற்கு பாலிவுட் மற்றும் டோலிவுட் வாய்ப்புகளை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, விஜய்யின் “மாஸ்டர்” மற்றும் தனுஷின் “மாறன்” படங்களில் இணைவதாக இருந்த நிலையில், அந்த வாய்ப்புகளை மாளவிகா மோகன் பெற்றிருந்தார். இந்நிலையில், ராஷி கண்ணாவின் அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News