33வது ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் துவங்கி உள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் முன்பு நடந்த துவக்க நாள் விழாவில் நடிகர் சிரஞ்சீவி அவருடைய குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். சிரஞ்சீவி, அவரது மனைவி சுரேகா, மகன் ராம் சரண், மருமகள் , பேத்தி உபாசானா, பேத்தி கிலின் காரா ஆகியோருடன் லண்டன் சென்று அங்கிருந்து பாரிஸ் சென்று ஒலிம்பிக்ஸ் துவக்க நாள் விழாவில் கலந்து கொண்ட சிரஞ்சீவி மனைவி சுரேகாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. சுரேகாவுடன் ஒலிம்பிக்ஸ் ஜோதியின் பிரதியை வைத்திருக்கும் மகிழ்ச்சியான தருணம். எங்களின் பெருமைமிகு இந்தியக் குழுவின் ஒவ்வொரு வீரரருக்கும், எல்லாவற்றிலும் மிகச் சிறந்த பதக்கப் பட்டியலைப் பெற வாழ்த்துகிறோம், கோ இந்தியா, ஜெய்ஹிந்த்,” என்று குறிப்பிட்டுள்ளார்.அதேபோல் ராம் சரணின் மனைவியும் ராம் சரணுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more