Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதாநாயகியாக ரீ என்ட்ரி கொடுக்கும் சண்டைக்கோழி பட கதாநாயகி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் ஹிட்டான ரன்என்கிற வெற்றிப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் மலையாள நடிகை மீரா ஜாஸ்மின். அதைத்தொடர்ந்து “சண்டக்கோழி”, ஆயுத எழுத்து உள்ளிட்ட பல படங்களில் தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய திருமணம் செய்து கொண்டு செட்டிலானவர் பின்னர் கணவரிடம் இருந்து பிரிந்து மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

அதே சமயம் தற்போது அவர் நடிக்கும் படங்களில் எல்லாமே அந்த பழைய மீரா ஜாஸ்மினை பார்க்க முடியவில்லை. கொஞ்சம் வயதான தோற்றம் வந்துவிட்டதை நன்றாகவே உணர முடிகிறது. இந்த நிலையில் தான் பிரபல மலையாள இயக்குனர் வி.கே பிரகாஷ் இயக்கத்தில் பாலும் பழவும் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் மீரா ஜாஸ்மின். இவருக்கு ஜோடியாக வளர்ந்து வரும் இளம் நடிகர் ஒருவர் நடித்துள்ளார். முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக இது உருவாகியுள்ளது.

இந்த படம் ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாகிறது என்கிற அறிவுப்புடன் கூடிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகி மீரா ஜாஸ்மின் என்றாலும் போஸ்டரில் அவரை காணவில்லையே என்று பலருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்திருக்கும். ஆனால் போஸ்டரை நன்கு உற்றுப்பார்த்தால் தான் அதில் மணப்பெண் கோலத்தில் இருக்கும் இளம்பெண் மீரா ஜாஸ்மின் என்பதே தெரிய வரும். அந்த அளவிற்கு ஆளே அடையாளம் கண்டுபிடிக்க முடியாத விதமாக வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார் மீரா ஜாஸ்மின்.

- Advertisement -

Read more

Local News