நடிகை மற்றும் பா.ஜ.க எம்.பி. கங்கனா ரணாவத் தயாரித்து, இயக்கி, நடித்திருக்கும் படம் ‘எமெர்ஜென்சி’. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய அவசரநிலைச் சூழலை அடிப்படையாகக் கொண்டு படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் கங்கனா நடித்துள்ளார்.
செப்டம்பர் 6ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது, ஆனால் தணிக்கை குழுவின் சான்றிதழ் இல்லாததால் அன்றைய தினம் படம் வெளியாகவில்லை.
இதற்கு மும்பை தணிக்கை குழு தற்போது ‘யுஏ’ சான்றிதழை வழங்கியுள்ளது. இதனால், இந்தியப் பெண்களை இழிவுபடுத்தும் வசனங்கள், பாகிஸ்தான் வீரர்கள் வங்கதேச அகதிகளைத் தாக்குவது போன்ற காட்சிகள், ஆபரேஷன் ‘ப்ளூஸ்டார்’ பற்றிய உண்மையான புகைப்படங்கள் உட்பட 10 காட்சிகளை மாற்ற வேண்டும்; மேலும் மூன்று காட்சிகளை நீக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் யு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.