Thursday, August 15, 2024

பணத்தாசை பிடித்த குபேரா பட நாயகி… வெளியான ராஷ்மிகாவின் கதாபாத்திர தோற்றத்தின் வீடியோ!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

குபேரா படத்தில் நடிகர் தனுஷ் பிச்சைக்காரனாக தோற்றமளிக்கும் முதல் காட்சி வெளியானது. வசதிக்காக ஏங்கி தவிக்கும் நபராக தனுஷ் குபேரா படத்தில் நடித்து வருகிறார் எனக் கூறப்படுகிறது. சேகர் கமுலா இயக்கத்தில் உருவாகும் இந்த படம், இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிச்சைக்காரனாக தனுஷ் தோன்றிய நிலையில், பணத்தின் மீது ஆசை இல்லாத பணக்காரராக நாகார்ஜுனா தோன்றுகிறார். இந்நிலையில், ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திரம் குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

குபேரா படத்தின் புதிய காட்சியில் நடிகை ராஷ்மிகா மந்தனா, ஒரு குழியிலிருந்து பணப்பெட்டியை பேராசையுடன் தூக்கிச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ராஷ்மிகா மந்தனா தனுஷுடன் வெறும் டூயட் மட்டும் பாடி நடிக்கவில்லை என்றும், அவருடைய கதாபாத்திரத்தை சேகர் கமுலா வலுவாகவே எழுதியுள்ளார் என்பதைக் காட்டுகிறது என ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பை பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News