Saturday, September 14, 2024

நேஷனல் கிரஷின் க்ளோஸ் அப் செல்ஃபி… ட்ரெண்டிங் கிளிக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தியில் சமீப காலமாக பிசியான நடிகையாக மாறிவிட்டார். நேஷனல் கிரஷ் என ராஷ்மிகா மந்தனாவை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த ஆண்டு வெளியான அனிமல் திரைப்படம் இந்தியில் ராஷ்மிகா மந்தனாவுக்கு அடுத்ததாக சல்மான் கான் ஜோடியாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் சிக்கந்தர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தது. ஏற்கனவே தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தை தொடர்ந்து புஷ்பா 2 படத்திலும் ஸ்ரீவள்ளியாக நடித்து வருகிறார். அல்லு அர்ஜுன் உடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடனமாடிய சூடான தீ பாடல் சமீபத்தில் வெளியாகி 100 மில்லியன் வியூஸ் பெற்று சாதனை படைத்தது. ஸ்ரேயா கோஷல் அந்த பாடலை பாடியிருந்தார்.

சமீபத்தில் சேகர் கமூலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா நடித்து வரும் குபேரா படத்தில் ராஷ்மிகா மந்தனா பணத்திற்கு எந்தளவுக்கு ஆசைப்படுபவர் என்பதை காட்டும் விதமாக ஒரு வீடியோ வெளியானது. இப்படி இந்திய சினிமாவில் அனைத்து மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா டீ ஷர்ட் பனியன் அணிந்துக் கொண்டு செம க்ளோஸ் அப்பில் செல்ஃபி புள்ளையாக மாறி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News