Tuesday, November 19, 2024

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சினிமா பக்கம் திரும்பும் கோ பட நாயகி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

உத்தர பிரதேசத்தில் இருந்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பியா பாஜ்பாய். ஏ.எல். விஜயின் முதல் படமான பொய்சொல்லப் போறோம் மூலம் திரையுலகிற்கு வந்த பியா, அதன் பிறகு ஏகன், கோவா, பலே பாண்டியா, கோ, சட்டம் ஒரு இருட்டரை இரண்டாம் பாகம் போன்ற பல படங்களில் நடித்தார். கடைசியாக, 2018ம் ஆண்டு வெளியான அபியும் அனுவும் படத்தில் நடித்திருந்தார்.

பெரிய வாய்ப்புகள் இல்லாமல் இருந்த பியா பாஜ்பாய் தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு மாயன் படத்தின் மூலம் திரும்பி வருகிறார். இந்தப் படத்தில் பிந்து மாதவி, பிரியங்கா மோகன் ஆகியோருடன் 3வது நாயகியாக பியா நடிக்கிறார். ஜெ. ராஜேஷ் கண்ணா எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தை பாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் ஜான் விஜய், ஆடுகளம் நரேன், சாய் தீனா, கஞ்சா கருப்பு, ராஜ சிம்மன், ஶ்ரீ ரஞ்சனி, ரஞ்சனா நாச்சியார், கே.கே. மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ். ஜோன்ஸ் ரூபெர்ட் இசையமைத்துள்ளார், கே.அருண் பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இரண்டு பாகங்களாக வெளிவரும் இந்தப் படம் பேண்டசி த்ரில்லர் வகையில் உருவாகியுள்ளது.

- Advertisement -

Read more

Local News