Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னையில் நடைப்பெறவுள்ள இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இசைஞானி இளையராஜா நீண்ட இடைவெளிக்குப் பிறகு சென்னையில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை நாளை ஜூலை 14 நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் அவரது பல ஏவர்கிரீன் பாடல்கள் பாடப்பட இருக்கின்றன. இளையராஜாவுடன் விபாவரி, ஸ்வேதா மோகன், எஸ்.பி.பி.சரண், ஹரி சரண், மது பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பாட உள்ளனர். அதோடு நிகழ்ச்சியின் முக்கியத்துவமாக ஹங்கேரி இசை கலைஞர்களும் இசையமைக்க உள்ளனர்.

சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நாளை மாலை 6.30 மணிக்கு நிகழ்ச்சி துவங்க உள்ளது. அருண் ஈவன்ட் மற்றும் மெர்குரி நிறுவனத்தினர் இணைந்து இவ்விழாவினை நடத்துகின்றனர்.

மக்கள் போக்குவரத்துக்கு சிரமமின்றி வந்து செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. அதோடு பாதுகாப்பு, அவசர உதவி, மருத்துவம், குடிநீர் என்று அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி இலவச மெட்ரோ ரயில் பாஸ் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News