சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் கயல் தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் இத்தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டிக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் நடித்துவரும் கயல் தொடர் டிஆர்பியில் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து முன்னணியில் உள்ளது.நடிகை சைத்ரா ரெட்டி பால் பண்ணை ஒன்றை ஆரம்பித்து இருப்பதாக முன்னதாகத் தெரிவித்து இருந்தார். இதுதவிர இவர் அழகு கலைஞராகவும் உள்ளார்.இந்த நிலையில், நடிகை சைத்ரா ரெட்டி புடவைக் கடை தொழிலை ஆரம்பித்துள்ளதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், இவர் நிலவரசி என்ற இவரது புடவைக் கடையின் திறப்பு விழா வரும் ஆக. 9 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more